பணத்தாசை குட்டிக் கதைகள்.

ஒரு வைர வியாபாரி, தன்னுடைய வைரங்களை வெளியூர் சென்று விற்றுவிட்டுப் பணமூட்டையோடு ஊர் திரும்புகிறான்.
வரும் வழியில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வைர வியாபாரி எப்படியாவது ஆற்றைக் கடந்துவிடலாம் என்று எண்ணி அதைக் கடக்க முயற்சித்தான்.
வெள்ளத்தின் வேகம் அவனை நிலை தடுமாறச செய்தது. அதனால் பண மூட்டையை வெள்ளத்தில் தவறவிடுகிறான். உடனே "ஐயோ! என் பண மூட்டையை வெள்ளம் அடித்துச் செல்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்" என்று சத்தம் போட்டான்.
சற்று தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவனின் காதில் வியாபாரியின் கதறல் சத்தம் கேட்டது. உடனே மீனவன் ஆற்றில் குதித்து கடுமையாகப் போராடி பண மூட்டையை மீட்டு எடுத்துக்கொண்டு கரையை அடைகிறான்.
"ஐயா! இந்தப் பண மூட்டையைக் காப்பாற்றச் சொல்லிக் கதறினீர்களே, நீங்கள் எங்கு இருக்கிறீர்கள். இந்தப் பண மூட்டை என்னிடம் இருக்கிறது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள்" என்று சத்தம் போட்டான். வெகு நேரமாகியும் அதைப் பெற்றுக்கொள்ள யாரும் வரவில்லை.
பிறகுதான் மீறவனுக்குப் புரிந்தது, அந்தப் பணமூட்டைக்குச் சொந்தக்காரர் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார் என்று. "ஐயோ! பாவம், அந்தப் பணக்காரர். இந்தப் பணமூட்டைக்குப் பதிலாக தன்னைக் காப்பாற்றும்படி குரல் கொடுத்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருப்பேன்" என்று அந்த மீனவன் வருந்தினான்.
இப்படித்தான் நாமும் பல நேரங்களில் நம் தேவை என்ன என்று தெரியாமல், வாழ்வில் உயிருக்குச் சமமான நிம்மதியை இழந்துவிடுகிறோம்.
பணத்தாசை என்ற தலைப்பில், இந்தக் கதை நான் படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு