பறவையும் ஆமையும்! கதை, குழந்தைகளுக்கான தமிழ் கதைகள்,Tamil stories for kids

ஒரு பறவை கூடு கட்டியிருந்த மரத்தின் கீழ், ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த ஆமை, மரத்தில் இருந்த பறவையிடம் பேச்சு கொடுத்தது. அப்பொழுது பறவையின் கூடு அழகாக இல்லை என்றும், அசிங்கமாக, உடைந்த குச்சிகளால் கட்டப்பட்டுள்ளது என்றும் ஆமை, பறவையை மட்டம் தட்டிக் கேலி பேசியது. ஆனால், தனது வீடான தன் முதுகின் மீதுள்ள ஓடு,சரியான வடிவம் கொண்டு பலமாக இருப்பதாகக் கூறியது.

அதைக் கேட்ட பறவை என்னுடைய கூடு உடைந்து அசிங்கமாக இருந்தாலும், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு நானே உருவாக்கியது; இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று பதிலளித்தது.

மேலும் ஆமை, தனது கூட்டை விட உனது கூடு சிறந்தது அல்ல என்று பறவையிடம் கூறியது. அதைக்கேட்ட பறவை தனது கூடு தான் உனது கூட்டினை விட சிறந்தது; ஏனெனில் தனது குடும்பம் மற்றும் நண்பர்கள் தன்னுடன் இந்த கூட்டில் சேர்ந்து வாழ முடியும்; ஆனால் உனது கூட்டில் உன்னை தவிர வேறு யாரும் நுழையக்கூட முடியாது என்று மகிழ்ச்சியுடன் பதிலளித்தது.

4 comments:

  1. அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குழந்தைகளுக்கான கதை நன்றாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி மிகவும் நன்றி

      Delete

1-5 classes Math games collection for kids

 தொடக்க நிலை மாணவர்களுக்கான கணித விளையாட்டுகள் தொகுப்பு 1 முதல் 5 வகுப்புகளுக்கு மிகவும் பயன்தரும் விளையாட்டுகளின் சிறப்பான தொகுப்பு